தனுஷ் பட நடிகை நிஜத்தில் ஒரு கிரிக்கெட் வீராங்கனையா? - ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புகைப்படம்
நடிகர் தனுஷி நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. இப்படம் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற தலைப்பில் உலக திரைப்படவிழாவில் திரையிடபட இருக்கிறது. கர்ணன் தான் இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்த படத்தில் நடித்து இருந்த ஒரு நடிகையைப் பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் தனுஷின் அக்காவாக நடித்த நடிகை தனது நடிப்பால் ரசிர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவர் வேறு யாரும் இல்லை, தமிழில் நீண்ட நாட்களாக பெரிய விமர்சனத்திற்கு உள்ளான குறும்படமான ‘லட்சுமி’ குறும்படத்தில் நடித்தவர் தான் இவர்.
அப்படத்தின் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஒரே நாளில் மிகவும் பிரபலமானார் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி. இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் ஆவார். பெண்கள் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் அவர்களுடன் இணைந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா B அணிக்காக ஒரு தொடரில் விளையாடி இருக்கிறார்.
இதுகுறித்து லட்சுமி ப்ரியா சந்திரமௌலி பேசுகையில், `இந்தியா `பி’ டீமுக்காக மிதாலி ராஜ் தலைமையில வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா விளையாடி இருக்கிறேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கை மாறிவிட்டது. கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து கிரிக்கெட் பார்த்து வருகிறேன். இந்திய மகளீர் அணியின் உலக கோப்பை தொடர் குறித்தும் பிங்கர் டிப்பில் விவரங்களை தெரிந்து வைத்துள்ளேன் என்றார்.