இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய மணிரத்னம் பட நடிகை!

cinema
By Nandhini Oct 26, 2021 05:40 AM GMT
Report

இயக்குனர் மணிரதனம் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான ‘பம்பாய்’ படத்தில் ‘ஹம்ம ஹம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இந்தி நடிகையான இவர் தமிழில் நடிகர் குணாலுடன் ‘காதலர் தினம்’ கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

பிறகு, நடிகர் அர்ஜுன்னுடன் ‘கண்ணோடு காண்பதெல்லாம் ‘ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார் சோனாலி. ஆனால், சில வருடங்களுக்கு முன்பு இவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறிய செய்தி, அனைத்து திரைபிரபலங்கள், இவருடைய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நோய்க்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்த நடிகை சோனாளி, கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வந்தார். இந்த சிகிச்சைக்கு பிறகு, சில மாதங்களாக அவர் விக் வைத்துக்கொண்டு, புதிய தோற்றத்தில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

தற்போது, அந்நோயிலிருந்து முற்றிலுமாகவே மீண்டு வந்துள்ளார் சோனாலி. இது குறித்து ஒரு நெகிழ்வான பதிவினை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், இந்த நேரம் எல்லாம் எவ்வளவு வேகமாக செல்கிறது என்று நாம் திரும்பி பார்த்தால் தான் தெரியும், இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​நான் எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்றே தெரிகிறது. ஆனால் மிக முக்கியமாக அதற்குப் பிறகு என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று மற்றவர்களை கூற வாய்ப்புகளை கொடுக்காமல் இருந்திருக்கேன். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையை நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள். பாதையையம் நீங்கள் தான் உருவாக்கியது. எனவே, நினைவில் கொள்ளுங்கள் ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த முடிவை எடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இவர், 2002ம் ஆண்டு, இந்தி பட இயக்குநர் கோல்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சோனாலிக்கு தற்போது 45 வயதாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். சமீபத்தில் இவர் ஒரு போட்டோவினை பதிவிட்டார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். 

இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய மணிரத்னம் பட நடிகை! | Cinema

இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய மணிரத்னம் பட நடிகை! | Cinema

இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய மணிரத்னம் பட நடிகை! | Cinema

இந்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய மணிரத்னம் பட நடிகை! | Cinema