இந்த வாரம் எலிமினேஷன் உள்ளதா? கமல் பிக்பாஸில் போட்டியாளர்களை சந்திக்கும் ப்ரொமோ வெளியீடு
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று 6வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதல் முதலாக கமல்ஹாசன் போட்டியாளர்கள் அனைவருடனும் பேசக் கூடிய முதல் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் இந்த வாரம் எலிமினேஷன் உள்ளதா என்பது குறித்து பேச உள்ளார். தற்போது இதற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் கமல்ஹாசன் வெற்றி என்பதற்கான ஒரே ஃபார்முலா தடைகளை வென்று முன்னேறிச் செல்வது தான். அனைவருக்குமே தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். பொருத்திருந்து பார்க்கலாம் இந்த வாரம் அனைவரும் உள்ளே இருப்பார்களா என்பது போல கூறியுள்ளார். இந்த வாரம் எலிமினேஷன் உள்ளதா, இல்லையா என்பது குறித்து இனிமேல் தான் தெரியும்.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ -