சிவப்பழகில் சிலையாக மாறிய விஜய் டிவி டிடி - புகைப்படத்தை பார்த்து மயங்கிய ரசிகர்கள்

cinema
By Nandhini Oct 08, 2021 07:08 AM GMT
Report

சிகப்பு நிற உடையில் பிரபல தொகுப்பாளினி டிடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டி.வி.யில் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் டி.டி என்கிற திவ்யதர்ஷினி. இவர் 'காபி வித் டிடி' என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தன்னுடைய பேச்சு திறமையால் இவருக்கென்று ரசிகர்களை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், டி.டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றார். அங்கு ஜாலியாக பொழுதை கழித்தார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். அதோடு சமீபத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்தார்.

இந்நிலையில், சிவப்பு நிற உடையில் அழகு ஓவியமாய் இருக்கும் புகைப்படங்களை டிடி தற்போது வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.   

சிவப்பழகில் சிலையாக மாறிய விஜய் டிவி டிடி - புகைப்படத்தை பார்த்து மயங்கிய ரசிகர்கள் | Cinema

சிவப்பழகில் சிலையாக மாறிய விஜய் டிவி டிடி - புகைப்படத்தை பார்த்து மயங்கிய ரசிகர்கள் | Cinema

சிவப்பழகில் சிலையாக மாறிய விஜய் டிவி டிடி - புகைப்படத்தை பார்த்து மயங்கிய ரசிகர்கள் | Cinema