ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர் - குவியும் பாராட்டு
விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் ரசிகரை ஜூனியர் என்.டி.ஆரின் வியப்பில் ஆழ்த்திய செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
சினிமாவில் தோன்றும் நட்சத்திரங்கள் எளிதில் ரசிகர்களை உருவாக்கிவிட முடியாது. அப்படி ரசிகர்களை உருவாக்கிவிட்டு அவர்களை கண்டும் காணாமல் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் தனது ரசிகரை நினைத்து கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபல நடிகரின் செயல் சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முரளி. இவர் ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர். சில நாட்களுக்கு முன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கிய முரளியின் இரண்டு சிறுநீரகங்களும் பழுது விட்டன. தற்போது அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் முரளி ஜூனியர் என்டிஆரை பார்க்க வேண்டும் என்ற தன்னுடைய ஆவலை குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். முரளியின் விருப்பம் பற்றி குடும்ப உறுப்பினர்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் ஜூனியர் என்டிஆருக்கு தகவல் கொடுத்தார்கள்.
இந்நிலையில் இன்று வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முரளியுடன் ஜூனியர் என்டிஆர் பேசியிருக்கிறார். எதை பற்றியும் கவலைப்படாதீங்க, நீங்க குமணமாகிடுவீங்க என தனது ரசிகரிடம் வீடியோ காலில் தன்னம்பிக்கை அளித்த ஜூனியர் என்டிஆர், ரசிகரின் நிலையை பார்த்து கண்கலங்கி இருக்கிறார்.
படத்தில் நடித்தோம் முடித்தோம் என மற்ற நடிகர்களை போல இல்லாமல், தனது ரசிகரை நினைத்து அவருக்கு ஊக்கம் அளித்த ஜுனியர் என்டிஆரின் செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மருத்துவமனையில் தன்னுடன் வீடியோ காலில் ஜூனியர் என்டிஆர் பேசியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்று முரளி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.