விஜய் -தோனி சந்திப்பு - வயிற்றெரிச்சலில் விக்னேஷ் சிவன் போட்ட டுவிட்

cinema
By Nandhini Aug 12, 2021 02:37 PM GMT
Report

தளபதி விஜய் மற்றும் தோனி சந்திப்பின் புகைப்படங்களை பார்த்த நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் வயிற்றெரிச்சலோடு, போட்டுள்ள பதிவு, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு, கோகுலம் ஸ்டூடியோவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளார்.

இந்த விளம்பரப்பட ஷூட்டிங் விஜய்யின் படப்பிடிப்பு நடந்து வரும் கோகுலம் ஸ்டூடியோவில் தான் எடுக்கப்பட்டது. தோனி வந்துள்ளதை அறிந்த நடிகர் விஜய் அவரை நேரில் சந்தித்து பேசினார். மேலும் படக்குழுவினர் அனைவரும் தல தோனியுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். இது குறித்த புகைப்படம் இன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியிலும், தல தோனி ரசிகர்கள் மத்தியிலும் வைரலாக பார்க்கப்பட்டது.

இதைக் கண்ட நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்... வயிறு எரியுது டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியசுக்கு போய்விட்டது. நெல்சன் திலீப் குமார் இந்த புகைப்படத்தின் ரா ஃபூட்டேஜ் இருந்தால் அனுப்புங்கள், போட்டோஷாப் செய்துகொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.