விஜய்யின் பீஸ்ட் படத்தில் முதன் முறையாக இணையும் தேசிய விருது நாயகன்! ரசிகர்கள் செம்ம குஷி!
நடிகர் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படம்தான் பீஸ்ட். இப்படத்திற்கான அப்டேட் சமீபத்தில் வெளியாகியது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ள முக்கிய கதாபாத்திரங்களின் பட்டியலை சன் பிக்சர்ஸ் வீடியோவாக வெளியிட்டது. தற்போது மற்றொரு புதிய அப்டேட் இணையத்தில் கசிந்திருக்கிறது. இந்நிலையில், தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும், தனுஷ் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் ஒரு பாடலை பாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல், நடிகர் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையேயான பிரச்சனை முடிந்து மீண்டும் இருவரும் ஒன்றிணைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே மேலோங்கி இருக்கிறது.
