எனக்கும், விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது... வைரலாகும் நயன்தாரா வீடியோ

cinema
By Nandhini Aug 10, 2021 12:00 PM GMT
Report

இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று நயன்தாரா கூறிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2015ம் ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.

அப்போது, அந்தப் படத்தில் நடித்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதல் புறாக்களாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், விஜய் டிவி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நயன்தாராவின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. அதில், நயன்தாரா கையில் அணிந்துள்ள மோதிரம் குறித்து டிடி கேட்ட ஒரு கேள்வி, நயன்தாரா பதிலளித்து பேசுகையில், எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.