நடிகர் விஜய்யை பார்க்க குடும்பத்துடன் வந்த மாஜி நிர்வாகிக்கு நேர்ந்த கதி!

cinema
By Nandhini Aug 02, 2021 08:24 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் விஜய் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகர் விஜய் பெயரில் மக்கள் இயக்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் மாநில துணைச் செயலாளராக இருந்தவர்தான் குமார்.

இவர் சென்னை பனையூரிலுள்ள தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு குமார் இயக்கத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று குமார் தனது குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யை பார்க்க நீலாங்கரையிலுள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, நடிகர் விஜய் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, உடனே, வீட்டிலிருந்த ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் கிடைத்ததும் உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் குமாரையும் அவரது குடும்பத்தினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து குமாரின் மனைவி வசந்தி பேசுகையில், “என் கணவர் குமாரை பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். நடிகர் விஜய் அளித்த வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் எங்களை வற்புறுத்தி வந்தனர். இது தொடர்பாக நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க இங்கு வந்தோம். ஆனால் விஜய் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார். இதை அறிந்ததும் நாங்கள் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். ஆனால் விஜய் வீட்டு ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் எங்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்று திரும்பிச் செல்லுமாறு எங்களிடம் அறிவுறுத்தினர்” என்று கூறினார். 

நடிகர் விஜய்யை பார்க்க குடும்பத்துடன் வந்த மாஜி நிர்வாகிக்கு நேர்ந்த கதி! | Cinema