நடிகை யாஷிகா கார் விபத்தில் உயிரிழந்த பெண் இவர்தானாம்! புகைப்படம் வைரலானது! சோகத்தில் ரசிகர்கள்
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில், நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய நண்பர்களுடன் வந்த கார் சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், நடிகை யாஷிகா ஆனந்த், மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி (28), என்பவர் இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தின் போது யாஷிகா தான் கார் ஓட்டி வந்ததால், அவர் மீது 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த பவானி என்பவரின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் யாஷிகா ஆனந்த மற்றும் உடன் நண்பர்கள் இருக்கின்றனர்.
அமெரிக்காவில் பணியாற்றி வந்த பவானி, வார விடுமுறையைக் கழிப்பதற்காக நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் 2 ஆண் நண்பர்கள் என 4 பேர் மாமல்லபுரத்துக்குச் சென்றிருக்கின்றனர்.
பின்னர், அங்கிருந்து சென்னை நோக்கி நடிகை யாஷிகா ஆனந்த், காரில் தன்னுடைய நண்பர்களுடன் புறப்பட்டுள்ளார். காரை நடிகை யாஷிகா ஓட்டியுள்ளார்.
அதன் பின்னரே இந்த விபத்து நடந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

