‘உன் கைய புடிச்சி உனக்கு 100 முத்தம் கொடுப்பேன்’ - பா.ரஞ்சித்தை பாராட்டு மழையில் நனைய வைத்த நடிகர் நாசர்!
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. இந்த படம் தற்போது அமேசான் தளத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வடசென்னையைச் சேர்ந்த இரு பரம்பரையினருக்கு இடையே நடக்கும் குத்துச் சண்டையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடித்துள்ள பலரும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து உண்மையாகவே பாக்ஸிங் கற்றுக்கொண்டுள்ளனர். அதனால் தான் படத்தின் ஒவ்வோரு சண்டைக் காட்சியும் பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாக உள்ளது.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. இப்படத்தைப் பார்த்து அசந்து போன நடிகர் நாசர், இயக்குனர் பா ரஞ்சித்துக்கு உணர்வுப்பூர்வமான குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "தம்பி ரஞ்சித், உன்ன நான் பாராட்ட மாட்டேன். உங்கையப் புடிச்சி ஒரு நூறு முத்தங்கொடுத்து நன்றின்னு ஒரு வார்த்தை மனசார சொல்லுவேன். இப்படி ஒரு படம் எஞ்சமூகத்துக்கு கொடுத்ததுக்கு, நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
