கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா அளித்த வாக்குமூலம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில், நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய நண்பர்களுடன் வந்த கார் சாலையின் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், நடிகை யாஷிகா ஆனந்த், மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி (28), என்பவர் இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து யாஷிகா மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அவர் படுகாயமடைந்துள்ளதால், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், யாஷிகாவிடம் போலீசார் பெற்ற வாக்குமூலத்தில் யாஷிகா காரை ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் அவர் மதுபோதையில் இல்லை எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிவேகமாக காரை ஓட்டி வந்த யாஷிகா கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்தில் சிக்கியுள்ளார். யாஷிகா கார் ஓட்டி வந்த போது அவரது தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் அவர் விபத்து ஏற்பட்டபோது காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் யாஷிகாவுக்கு இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.