தனது பிறந்தநாளோடு மற்றொரு விழாவை சேர்த்து கொண்டாடிய நடிகர் யோகிபாபு - பிரபலங்கள் வாழ்த்து!

cinema
By Nandhini Jul 23, 2021 04:58 AM GMT
Report

காமெடி நடிகர் யோகிபாபு, தனது பிறந்தநாளோடு மற்றொரு விழாவை சேர்த்து கொண்டாடி இருக்கிறார். காமெடி நடிகர் யோகிபாபு தமிழ்சினிமாவில் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்து காமெடியில் அசத்திக்கொண்டு வருகிறார். நீண்ட நெடுநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் பிரபலமடைந்துள்ளார்.

குறுகிய காலத்திலேயே அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துவிட்டார். தற்போது விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்திலும், அஜீத்துடன் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், யோகிபாபு, நேற்று காலை தனது வீட்டில் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஆண்டு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் யோகிபாபு.

இந்த தம்பதிக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது பிறந்தநாளோடு தனது மகன் பெயர் சூட்டும் விழாவையும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார் யோகிபாபு. கடவுள் பக்தி அதிகம் கொண்ட யோகிபாபு, தீவிர முருகர் பக்தர். அதனால் தனது மகனுக்கு ‘விசாகன்’ என பெயர் வைத்திருக்கிறார்.

இந்த பெயர் சூட்டும் விழாவில் இயக்குனர்கள் சுந்தர்.சி, விரும்பாண்டி உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 

தனது பிறந்தநாளோடு மற்றொரு விழாவை சேர்த்து கொண்டாடிய நடிகர் யோகிபாபு - பிரபலங்கள் வாழ்த்து! | Cinema

தனது பிறந்தநாளோடு மற்றொரு விழாவை சேர்த்து கொண்டாடிய நடிகர் யோகிபாபு - பிரபலங்கள் வாழ்த்து! | Cinema