நீ வனிதான்னா, நான் நீலாம்பரிடி… மோதிக்கொண்ட வனிதா விஜயகுமார், ரம்யா கிருஷ்ணனின் Promo ரிலீசானது!
தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சி வெளியாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வனிதா பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் நடிகை வனிதா கூறுகையில், “பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். பெண்களுக்கு ஆண்களால் மட்டுமில்லாமல் பெண்களாலும் கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறது. பொறாமை காரணமாக நமக்கு வரும் வாய்ப்புகளை கெடுக்கிறார்கள்.
சீனியர் நடிகை இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சியாக உள்ளது என பதிவிட்டார். யார் அந்த சீனியர் என்று மக்கள் ஒரு பக்கத்தினர் கேட்டு வந்தனர். அடுத்த பக்கம் கமெண்ட்டுகளில் அந்த நிகழ்ச்சியின் நடுவர் ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்று கூறினர்.
அதை நம்பும் வகையில் தற்போது BB ஜோடிகள் Promo தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த Promoவில் வனிதா விஜயகுமார், ரம்யா கிருஷ்ணனும் வாக்குவாதம் செய்து கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த வனிதா விஜயகுமார் சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறிவிடுகிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “நீ வனிதான்னா, நான் நீலாம்பரிடி…” என்று சமூகவலைத்தளத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.