கமல் போஸ்டரை மாற்றி ‘நேசமணி’ போஸ்டரை வெளியிட்ட வடிவேலு ரசிகர்கள் - செம்ம வைரல்!

cinema
By Nandhini Jul 15, 2021 11:15 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' திரைப்படம் உருவாகுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

எனவே, ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கில் கமல், விஜய் சேதுபதி, பஹத் மூவரும் மிரட்டலான கெட்டப்பில் இருக்கும் போஸ்டர் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வைரலாகியது. அந்தப் போஸ்டரை வைத்து அஜீத், விஜய் ரசிகர்களும் தங்கள் நடிகர்களின் புகைப்படங்களை வைத்து போஸ்ட்டரை மீண்டும் உருவாக்கி வெளியிட்டனர்.

அந்த வரிசையில், தற்போது வடிவேலுவை வைத்தும் ‘விக்ரம்’ படத்தின் போஸ்டரை மீண்டும் உருவாக்கியுள்ளனர் வடிவேலுவின் ரசிகர்க.ள இந்த போஸ்டரில் ‘பிரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலுவின் நேசமணி, கிருஸ்ணமூர்த்தி மற்றும் கோவாலு கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது இந்த போஸ்டர் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஓராண்டுக்கு முன் #SaveNesamani என்ற ஹாஷ்டாக் உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து காண்ட்ராக்டர் நேசமணி மீது மக்களுக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

கமல் போஸ்டரை மாற்றி ‘நேசமணி’ போஸ்டரை வெளியிட்ட வடிவேலு ரசிகர்கள் - செம்ம வைரல்! | Cinema

கமல் போஸ்டரை மாற்றி ‘நேசமணி’ போஸ்டரை வெளியிட்ட வடிவேலு ரசிகர்கள் - செம்ம வைரல்! | Cinema