செம்ம க்யூட்டான மகனை உலகிற்கு அறிமுகம் செய்த பிரபல நடிகை!
cinema
By Nandhini
ஆர்யாவின் தம்பி சத்யா நடிகராக அறிமுகமான ‘அமரகாவியம்’ இப்படத்தில் முதன்முதலாக அறிமுகமான நடிகை மியா ஜார்ஜ். இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் ‘நேற்று இன்று நாளை’, சசிகுமார் நடிப்பில் ‘வெற்றிவேல்’, விஜய் ஆண்டனியின் ‘எமன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில், இவருக்கும், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பையாவுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இதனையடுத்து, மியா ஜார்ஜ் - அஸ்வின் தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
லூகா ஜோசப் பிலிப் என்று பெயரிட்டு தாயின் பூரிப்புடன் மகனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார் நடிகை மியா ஜார்ஜ்.
