நடிகர் கார்த்திக் கூறிய ஒன்றிய அரசு.... நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? கடுப்பில் காயத்ரி ரகுராம்!

cinema
By Nandhini Jul 07, 2021 08:25 AM GMT
Report

மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்த நடிகர் கார்த்திக்கிற்கு நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். கூட்டணி கட்சியினர் மற்றும் பாஜக எதிர்ப்பு சிந்தனை கொண்டவர்களும் இவ்வாறே அழைத்து வருகிறார்கள். இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்த கருத்துக்கள் விவாதமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை நடிகர் கார்த்தி நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசும்போது, மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நடிகர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக மக்கள் அவர்களை கூத்தாடி என்று அழைத்தால் அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள்? இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றுதான். நடிகர் சங்கத்திற்கு பதிலாக, இதை நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? அவரைப் போன்ற நன்கு படித்த மனிதனுக்கு புரிதல் மிகக் குறைவு shame,” என பதிவிட்டுள்ளார்.

அதேவேளையில், நடிகர்கள் திமுகவின் கொத்தடிமை என்பதை நிரூபித்து விட்டார் என்று அவர் பேசிய வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடுமையாக கமெண்ட் செய்து வருகின்றனர். நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா விவாதம் நடத்திக் கொள்ளத் தயாரா? என்று பாஜக சவால் விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.