சூப்பர் மேனை உலகிற்குக் கொடுத்தவர் மறைவு! சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் திரையுலகம்!

cinema
By Nandhini Jul 07, 2021 05:04 AM GMT
Report

ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரிச்சர்ட் டோனர் (91) காலமானார். ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான இயக்குநராக ரிச்சர்ட் டோனர் வலம் வந்தார். இவர் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள், திகில் படங்கள் என பல்வேறு ஜேர்னர்களில் சூப்பராக கலக்கியவர் ரிச்சர்ட் டோனர்.

நான் ஒரு சூப்பர் மேன்.. சூப்பர் மேன்... என்று சொல்லுக்கு உரியவர் ரிச்சர்ட் டோனர். ஏனென்றால், முதல்முதலில் சூப்பர்மேன் படத்தை இயக்கியவர் இவர்தான். உலகம் முழுவதும் சூப்பர் ஹீரோ என்றவுடனே மக்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருபவர் சூப்பர் மேன் தான்.

அந்தக் கதாபத்திரத்திற்கு உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். கெட் ஸ்மார்ட், பெர்ரி மேசன், கில்லிகன்ஸ் தீவு மற்றும் தி ட்விலைட் சோன் போன்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ரிச்சர்ட் டோனர் இயக்கி இருக்கிறார்.

இவர் லீத்தல் வெப்பன் படத்தின் 4 பாகங்களையும் உருவாக்கியுள்ளார். இந்நிலையில், தற்போது ரிச்சர்ட் டோனர் உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார். இவருடைய மறைவிற்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சூப்பர் மேனை உலகிற்குக் கொடுத்தவர் மறைவு! சோகத்தில் மூழ்கிய ஹாலிவுட் திரையுலகம்! | Cinema