44 வயதாகும் நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள ஆசை தெரிவித்த இளைஞன்! டுவிட்டரில் வைரல் !
தமிழ் திரையுலகில் சின்னஞ் சிறு குழந்தை முதல் நடித்து, பிரபலமானவர் நடிகை மீனா. மீனாவின் கண் அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
நடிகை மீனா முன்னணி நடிகர்களான, ரஜினி, கமல், விஜய், அஜித், விஜயகாந்த் அனைவருடனும் நடித்துள்ளார். தற்போது நடிகை மீனாவிற்கு 44 வயதாகிறது.
தற்போது, படத்தின் முக்கியமான கேரக்டர்களில் மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடிகை மீனாவிடம் சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்துள்ளார்.
அப்போது, இளைஞர் ஒருவர், அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்று கேட்க, அதற்கு மீனா, கொஞ்சம் லேட் ஆகிவிட்டதே என்று குறிப்பிட்டார். மீனாவின் இந்த பதில் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
