நயன்தாராவுடன் ஒரு நல்ல உறவை நான் பகிர்ந்து கொள்கிறேன் - நடிகை சமந்தா!
cinema
By Nandhini
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை சமந்தாகென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், நடிகை சமந்தா நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.
இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை சமந்தா பேசுகையில், இப்படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இப்படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். நயன்தாரா மற்றும் சேதுபதியுடன் ஒரு நல்ல உறவை நான் பகிர்ந்து கொள்கிறேன் என்றார்.
