இயக்குனர் ஷங்கருக்கு வந்த அடுத்த சிக்கல்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

cinema
By Nandhini Jul 01, 2021 07:14 AM GMT
Report

தமிழில் திரையுலகில் பிரம்மாண்டம் என்று சொன்னாலே அது இயக்குனர் ஷங்கர்தான். தற்போது, இயக்குனர் ஷங்கர் கமலஹாசன் கூட்டணியில் திரைக்கு வந்து ஹிட்டான வெற்றிப்படம் “இந்தியன்”. இப்படத்தின் 2ம் பாகம் படமாக்கப்பட்டு வந்தது. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பில் கிரேன் விழுந்து படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது.

அதற்காக சில நாட்களாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது. இந்த பொதுமுடக்கம் காரணமாக திரைப்பட சூட்டிங்குகளுக்கான அனுமதி மறுப்பு என பல்வேறு காரணங்களுக்காக இப்போது வரை படப்பதிவு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில். இப்போது இயக்குனர் ஷங்கர் அவரின் அடுத்தடுத்த படங்களுக்கான அப்டேட்களை வெளியிட்டார்.

இதனையடுத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா இன்டர்நேசனல் இயக்குனர் ஷங்கரின் மீது வழக்கு தொடர்ந்தது. ‘இந்தியன் 2’ படத்தினை எடுத்து முடிக்காமல் அவர் வேறு எந்த படத்தினையும் இயக்கக்கூடாது என்று வழக்கில் கூறப்பட்டது. ஷங்கர் தரப்பில் கூறப்பட்ட பதில்கள் நீதிபதிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.

இதனால், இப்பிரச்சினைக்காக மத்தியஸ்தரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். இருவருக்குமான பொதுவாதியாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு முடிவுக்காக “விக்ரம்” படக்குழுவும் காத்துக் கொண்டிருக்கிறது. 

இயக்குனர் ஷங்கருக்கு வந்த அடுத்த சிக்கல்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! | Cinema