‘என் பயோபிக்கில் நடிகர் சூர்யா தான் நடிக்க வேண்டும்’ - பிரபல கிரிக்கெட் வீரர் ஆசை!

cinema
By Nandhini Jun 26, 2021 10:34 AM GMT
Report

 தோனி, மேரி கோம், சாய்னா நேவால் என விளையாட்டு வீரர்களின் பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படங்கள் சர்ச்சையான விமர்சனங்களில் சிக்கியுள்ளன. சில படங்களில் அதிகளவில் பண வசூலையும் கொடுத்து வெற்றியும் பெற்றுள்ளன.

இதனால், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, சமூக வலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், உங்களுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் யார் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, அதற்கு, ‘தென்னிந்தியாவில் என்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் என்னுடைய பேவரைட் ஹீரோ சூர்யாதான் நடிக்கவேண்டும். அவரால்தான், என்னுடைய கதாபாத்திரத்தைச் செய்யமுடியும்’ என்றார். 

‘என் பயோபிக்கில் நடிகர் சூர்யா தான் நடிக்க வேண்டும்’ -  பிரபல கிரிக்கெட் வீரர் ஆசை! | Cinema