மகள் திருமணத்தை சிம்பிளாக நடத்தப்போறாராம் இயக்குநர் ஷங்கர்?
தமிழ் சினிமாவில் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான். ஆனால், அந்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணத்தை பொள்ளாச்சியில் ரொம்ப சிம்பிளாக நடத்தப்போறாராம்.
அடுத்த வாரம் இத்திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில், மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் மகனுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில், தற்போது திருமண செய்தியும் வெளியாகி உள்ளது. பொள்ளாச்சியில் திருமணத்தை பிரமாண்டமாகத்தான் நடத்த திட்டமிருந்தாராம் ஷங்கர். ஆனால, கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தனது முடிவை மாற்றிக்கொண்டாராம். கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் முடிந்த பின்னர் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த இயக்குநர் ஷங்கர் முடிவெடுத்துள்ளாராம்.