தன் அன்பால் தமிழ் உள்ளங்களை வசீகரித்த என் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள் - கமல் புகழாரம்

cinema
By Nandhini Jun 22, 2021 09:43 AM GMT
Report

நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம குஷியில் டுவிட்டரில் தெறிக்க விட்டு வருகின்றனர். நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமாத்துறையில் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து உலக நாயகன் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.