தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து அவமானப்படுத்துவது சரிதானா? சிக்கலில் சிக்கிய விஜய்

cinema
By Nandhini Jun 22, 2021 04:46 AM GMT
Report

தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே படத்திற்கு வைப்பதற்கான காரணம் என்ன? மர்மம் என்ன? என்று நடிகர் விஜய்யிடம் வன்னி அரசு கேள்வி எழுப்பியிருக்கிறது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் 47வது பிறந்த நாளையொட்டி வெளியாகி இருக்கிறது.

ஏற்கெனவே, விஜய்யின் ஆங்கிலச்சொல் தலைப்புகளாக லவ் டுடே, ஒன்ஸ்மோர், ஃபிரண்ட்ஸ், யூத், மாஸ்டர் என படங்கள் வெளியான நிலையில் 6-வது படமாக பீஸ்ட் வெளியாக உள்ளது.

இது தற்போது சர்ச்சையாக உருவாகியுள்ளது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தமது தாய்மொழியான #தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ? Master, Bigil,படங்களை தொடர்ந்து #Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? ” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.