லவ் யூ பசங்களா - நடிகர் தனுஷ் வெளியிட்ட மகன்களின் தெறிக்கவிட்ட புகைப்படம் வைரல்

cinema
By Nandhini Jun 21, 2021 06:16 AM GMT
Report

 நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் அறிமுகமானார். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் கொண்டு கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்தார் நடிகர் தனுஷ். இவர்கள் இருவரும் 17 ஆண்டுகள் தங்களது திருமண வாழ்வை வெற்றிக்கரமாக நிறைவு செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதனையடுத்து, நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தந்தையர் தின வாழ்த்துக்கள், எப்போதும் குழந்தைகளின் முதல் ஹீரோ தந்தை தான். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். லவ் யூ பசங்களா. நீங்கள்தான் எனது உலகத்தை அழகாக மாற்றினீர்கள் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டு வருகிறது.