பிரபல தமிழ்ப்பட நடிகர் உயிரிழந்தார்!
பிரபல தமிழ்ப்பட நடிகர் ஷமன் மித்ரு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா 2ம் அலை பரவி வருகிறது. இந்த கொரோனா தொற்றால் இதுவரை பல திரைப்பிரபலங்கள் பலியாகி உள்ளனர்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நடிகர் விவேக், நடிகர் மாறன், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ், நடிகர் பாண்டு உள்பட பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் இறந்துபோனார்.
இந்நிலையில் ‘தொரட்டி’ திரைப்பட கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். ஷமன் மித்ரு மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஷமன் மித்ரு மறைவிற்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
