பிரபல நடிகை கவிதாவின் மகன் கொரோனாவால் உயிரிழந்தார்! கணவருக்கு தீவிர சிகிச்சை!

1 month ago

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை கவிதா. இவரது மகன், கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.  அவரது கணவரும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல நடிகை கவிதா, தன்னுடைய அன்பு மகன் மகளை கொரோனாவால் இழந்துள்ள சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் தன்னுடைய 11 வயதில் 'ஓ மஞ்சு' என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாத்துறையில் அறிமுகமானார் கவிதா. அறிமுக பிறகு, கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் வலம் வந்தார்.

 

இந்நிலையில், கடந்த சில மாதமாக கொரோனா 2-வது அலை காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. இதனால், கவிதா வீட்டில் இருந்துள்ளார்.

இவரது மகன், சஞ்சய் ரூப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் தனிமையிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இவரை தொடர்ந்து கவிதாவின் கணவருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இருவருக்குமே உடல் நிலை மோசமானது. இதனையடுத்து, பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கவிதாவின் மகன் சஞ்சய் ரூப் நேற்று உயிரிழந்தார்.

நடிகை கவிதாவின் கணவர் தசரத ராஜுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை கவிதாவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.  


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்