இது பொம்மள மூஞ்சியா... ஆம்பள மாதிரி இருக்கே..! விமர்சித்த நடிகரை திட்டித் தள்ளிய சுஹாசினி!

cinema
By Nandhini Jun 14, 2021 12:42 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாவர்தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமா படங்களில் மட்டும் இல்லாமல் பிரபல பத்திரிக்கையில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வருகிறார்.

பல ஆண்டுகளாக சினிமாத்துறையை சேர்ந்த பல பிரபலங்களின் பிடித்த நடிகராகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

தற்போது சினிமாவில் நடந்து வரும் கிசுகிசு, வதந்திகளை பற்றி பேட்டி கொடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகைகளிடம் திட்டு வாங்கியதை பற்றி அவர் மனம் திறந்து கூறியிருக்கிறார். முதன்முதலில் தன்னை திட்டியது யார் என்று கேட்டதற்கு, அவர் நடிகை சுஹாசினி மணிரத்னம் என்று கூறியிருக்கிறாராம்.

சுஹாசினி அறிமுகமாகிய முதல் படத்தின் போது பயில்வான் இது பொம்பள மூஞ்சியா.... ஆம்பள மாதிரி இருக்கே... என்று விமர்சித்து எழுதினாராம்.

பட விழா ஒன்றில் நடிகை சுஹாசினியை பார்த்த நடிகர் பயில்வான் ரங்கநாதன், நடிகை சுஹாசினியை பார்த்து, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், நல்லா நடிக்கிறீர்கள் என்று கூறி பாராட்டினாராம்.

ஆனால், அதற்கு நடிகை சுஹாசினி, உண்மையை சொல்லுங்க, நீங்கள் தான் என்னை அப்படி கூறினீர்களே என்று நேராகவே கூறி திட்டினாராம். 

இது பொம்மள மூஞ்சியா... ஆம்பள மாதிரி இருக்கே..! விமர்சித்த நடிகரை திட்டித் தள்ளிய சுஹாசினி! | Cinema