ரஜினியின் அமெரிக்க பயணத்திற்கு அதிகாரிகள் அனுமதி மறுப்பா? நடிகர் ரஜினி அப்செட்
நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்க பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், ரஜினியின் அமெரிக்க பயணத்திற்கு அதிகாரிகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அமைச்சர்கள் அனுமதி அளித்தும் கூட, கடைசி நேரத்தில் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை செய்துகொண்டு அங்கேயே சில நாட்கள் ஓய்வெடுத்து பின்னர் தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில், அமெரிக்கா செல்வதற்காகவே அவர் விரைந்து அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுத்து விட்டார். ஆனாலும் இன்னமும் படத்தின் டப்பிங் வேலைகள் முடிவு பெறவில்லை. டப்பிங் வேலைகள் தொடங்கு முன்னர், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுவிடலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் ரஜினிகாந்த் தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்.

14 பேர் வரைக்கும் பயணம் செய்யக்கூடிய அந்த சிறப்பு தனி விமானத்தில் தன்னுடன் குடும்பத்தினரையும் அழைத்துச் செல்ல ரஜினி முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில், விரைவில் ரஜினி தனி விமானம் மூலம் அமெரிக்க பயணம் செய்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவியது.
ஆனால், அதிகாரிகள் இதற்கு அனுமதி மறுத்துள்ளனர். ரஜினியுடன் 14 பேர் பயணம் செய்வார்கள் என்ற பட்டியல் அதிகாரிகளிடம் சென்றது. இந்த 14 பேர் எதற்கு? என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் இந்தியாவின் பிரபலம், அவருக்கு உடல்நலக்குறைவு என்பதற்காக சிகிச்சை மேற்கொள்ள அவர் செல்கிறார். ஆனால், மற்ற 13 பேர் எதற்காக? என்கிற ரீதியிலேயே அதிகாரிகளின் கேள்வி எழுப்பினர்.
மேலும், ரஜினிகாந்த் கோவேக்சின் ஊசி போட்டிருப்பதால், அது தடுப்பூசி பட்டியலில் வராது என்றும் சொல்லி, அனுமதியை நிராகரித்துள்ளார்களாம் அதிகாரிகள். அமைச்சர்கள் அனுமதி அளித்தும், கடைசி நேரத்தில் தனது பயணத்திற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதால் அப்செட்டில் உள்ளாராம் நடிகர் ரஜினி.