இந்தியில் ஹீரோவானார் பிரபல கிரிக்கெட் வீரர்!
பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், இந்தி படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த், சூதாட்டப் புகாரில் சிக்கினார்.
இதனையடுத்து, அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. இதனை எதிர்த்த ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, உச்சநீதிமன்றம் அவருக்கான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதனையடுத்து, அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது, ஸ்ரீசாந்த் சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இந்தியில், அக்சர் 2, காபரே, மலையாளத்தில் டீம் 5, கன்னடத்தில் கெம்பே கவுடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீசாந்த், 'பட்டா' என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதை ஆர்.ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். அரசியல் த்ரில்லர் இந்தப் படத்தில், ஸ்ரீசாந்த், சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

