மேல் ஆடை இல்லாமல் போட்டோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் - கொந்தளித்த காளி பக்தர்கள்

cinema
By Nandhini Jun 12, 2021 04:37 AM GMT
Report

‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை மீரா மிதுன்.மீரா மிதுன் என்றாலே சர்ச்சைக்கும், சலசலப்புக்கும் பஞ்சமே இருக்காது. மாடலிங் துறையில் பலருடன் சர்சையில் சிக்கி போலீஸ், கோர்ட் படிகளில் ஏறினார். பின்னர், பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, இயக்குநர் சேரன் மீது பகீர் புகாரை கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதனையடுத்து, சினிமாவில் வாரிசு ஆதிக்கம் பற்றி பேசி, விஜய் – சூர்யா ரசிகர்களை கொந்தளிக்கச் செய்தார். இது மட்டுமல்லாமல், த்ரிஷா, நயன் தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தான் தனக்கு வரும் படங்களை தட்டிபறிப்பதாக குற்றம் சாட்டிக்கொண்டு சமூகவலைத்தளத்தில் கதறிக்கொண்டிருந்தார். தற்போது நடிகை மீரா மிதுன், அண்மைக்காலமாக தனது கிளாமர் போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று தனது முழு நிர்வாணப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நிர்வாணப் போட்டோ மட்டும் வெளியிடாமல் அதில் காளியின் பெயரை பயன்படுத்தியதுதான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த டுவிட்டர் பக்கத்தில், Kali’s nakedness shows that she has cast away illusion; in her, the entire truth about life and death is revealed என்று மீரா மிதுன் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்துவிட்டு, விளம்பரம் தேடுவதற்காக நீங்கள் எதையும் செய்வீர்கள். அதனால் நிர்வாண படத்தை வெளியிடுங்கள். அதற்காக காளியுடன் சம்பந்தப்படுத்தி பேசாதீர்கள். உங்கள் விளம்பரத்திற்காக கடவுளுடன் விளையாட வேண்டாம் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.