நடிகர் விஷால் பயப்படுகிறார் - தயாரிப்பாளர் ஆர்.பி.சௌவுத்ரி

6 days ago

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌவுத்ரி மீது நடிகர் விஷால் தி.நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘இரும்புத்திரை’ படத்திற்காக ஆர்.பி.சௌத்ரியிடம் வீட்டுப்பத்திரங்கள், பேங்க் செக் உள்ளிட்ட ஆவணங்கள் கொடுத்து வட்டிக்கு கடன் வாங்கியிருக்கிறர் நடிகர் விஷால். கடன் பணத்தை வட்டியுடன் திரும்ப கட்டிவிட்டார் விஷால்.

ஆனால், ஆவணங்களை திரும்ப கேட்டபோது, ஆவணங்கள் எங்கே இருக்கின்றது என்று எனக்கு தெரியவில்லை என்று கூறி திரும்ப தராமல் இழுத்தடித்துள்ளார் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌவுத்ரி. இது குறித்து, நடிகர் விஷால் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள ஆர்.பி.சௌத்ரி, ‘இரும்புத்திரை படத்துக்காக என்னிடமும் திருப்பூர் சுப்ரமணியத்திடமும் பைனான்ஸ் வாங்கியிருந்தார் நடிகர் விஷால். பணம் வாங்கும்போது அதற்கு உத்திரவாதமாக சில டாக்குமென்ட்ஸ் என்னிடம் கொடுத்தார்.

‘இரும்புத்திரை’ படத்துக்காக வாங்கிய கடனை எல்லாம் அடைத்துவிட்டார். எங்களுக்குள் எந்த நிலுவையும் கிடையாது என்று விஷாலுக்கு கையெழுத்துப்போட்டு கொடுத்துவிட்டோம். கடன் வாங்கும்போது கொடுத்த ஆவணங்களை என்னிடம் நடிகர் விஷால்.

அவை எங்கே இருக்கின்றது என்றே எனக்கு உண்மையில் தெரியவில்லை என்று சொன்னோன். நாளைக்கு அந்த பத்திரங்களை வைத்துக்கொண்டு நாங்கள் ஏதாவது பிரச்சனை செய்து விடுவோம் என்று விஷால் பயப்படுகிறார்.

அது ஒருபோதும் நடக்காது. உண்மையிலேயே அந்த பத்திரங்கள் எங்கே இருக்கின்றது எனக்கு தெரியவில்லை. ‘ஆயுத பூஜை’ பட இயக்குநர் சிவக்குமார்தான் திருப்பூர் சுப்பிரமணியத்தின் கொடுக்கல் வாங்கல் விஷயங்களை பார்க்கிறார். அவரிடம்தான் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை எல்லாம் கொடுத்து வைப்பார்.

அப்படித்தான் விஷால் சம்பந்தப்பட்ட பத்திரங்களையும், ஆவணங்களையும் கொடுத்திருக்கிறார். கடந்த 2018ல் சிவக்குமார் மாரடைப்பால் திடீரென்று இறந்துவிட்டார். அதனால் அவர் ஆவணங்களை எல்லாம் எங்கே வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

இதுவரைக்கும் தேடிப்பார்த்தும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை விஷாலிடம் கூறிவிட்டோம். அவர் பயப்படுகிறார். அது தேவையில்லை. எந்தப் பிரச்சனையும் இனி வராது. அவர் போலீசில் புகார் கொடுத்தாலும் இது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. பேசித் தீர்த்துக் கொள்ளலாம். என்றார்.

ஆவணங்கள் வைத்து பிரச்சினை செய்வார்களோ என்ற பயம் ஒரு பக்கம், மீண்டும் யாரிடமாவது கடன் வாங்கவேண்டும் என்றால் அதற்கு பத்திரங்கள் தேவைப்படுமே என்று மிகுந்த கவலையுடன் நடிகர் விஷால் இருப்பதாக அவரது தரப்பினர் கூறினர்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்