‘விஜய் 65’ படத்தில் மீண்டும் இணைந்த நடிகர் யோகிபாபு!
cinema
By Nandhini
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ‘விஜய் 65’. இப்படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்க உள்ளார்.
டுவிட்டரில் ஒருவர் நடிகர் யோகிபாபுவிடம் கேள்வி ஒன்றில், நீங்கள் ‘விஜய் 65’ படத்தில் நடிக்கிறீர்களாக? என்று கேட்டார். அதற்கு யோகிபாபு, நான் ‘விஜய்’ 65 படத்தில் இருக்கிறேன் என்றார்.
முன்னதாக ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் யோகிபாபு இணைந்து நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘விஜய் 65’ படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
