சிறுமி பாலியல் வழக்கில் கைதான பிரபல நடிகருக்கு ஆதரவு கொடுத்த யாஷிகா ஆனந்த்!

cinema
By Nandhini Jun 07, 2021 05:41 AM GMT
Report

சிறுமி வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் பியர்ல் வி பூரிக்கு ஆதரவாக நடிகை யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் தொலைக்காட்சி தொடர்களில் பிரபல நடிகராக பியர்ல் வி பூரி வலம் வருகிறார். தமிழில் நாகினி தொடரின் மூலம் இவர் தமிழ்திரையுலகில் பிரபலமானார். நேற்று, தானேவின் வாலிவ் போலீசார், 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தற்போது இவர் 2 வார நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த புகாரை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீசார் தரப்பு கூறுகையில், இந்த புகார் கடந்த 2019ம் ஆண்டு கொடுக்கப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளம் நிறுவப்படவில்லை. சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்த நாங்கள் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளோம்.நீதிமன்ற காவலில் இருக்கும் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் பியர்ல் வி பூரிக்கு ஆதரவாக பல நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை யாஷிகா ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பியர்ல் வி பூரி மிகவும் மென்மையான மனிதர். எனக்குத் தெரியும். அவர் ஒரு கனிவான மனிதர். உண்மைக்காக காத்திருப்போம். எனது நண்பர் திரும்பி வருவார்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரபல நடிகை அனிதா ஹசானந்தனி டுவிட்டர் பக்கத்தில், ‘அவரை எனக்குத் தெரியும். இது உண்மை அல்ல... உண்மையாக இருக்க முடியாது.. அனைத்தும் பொய்.. இதில் நிறைய விஷயங்கள் இருக்கிறது.. உண்மை விரைவில் வெளிவரும்’என்று பதிவிட்டுள்ளார்.