மகனுடன் CoviShield தடுப்பூசிப் போட்டுக்கொண்ட ஏஆர் ரஹ்மான்!

cinema
By Nandhini Jun 07, 2021 05:17 AM GMT
Report

வைரல் புகைப்படம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முதல் தவணை கொரோனா தடுப்பூசிப் போட்டுகொண்டதாக சமூவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று 2ம் அலை அதிகமாக பரவி வருகிறது. எனவே, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர தயங்குகின்றனர்.

திரைத்துறை பிரபலங்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது மகன் அமீன் இருவரும் முதல் தவணை கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படத்துடன் CoviShield தடுப்பூசிப் போட்டுக்கொண்டதாக சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.