காளிதாஸ் ஜெயராமை இயக்குகிறார் கிருத்திகா உதயநிதி!

cinema
By Nandhini Jun 06, 2021 05:06 AM GMT
Report

காளிதாஸ் ஜெயராமை இயக்குகிறார் கிருத்திகா உதயநிதி. அடுத்தப்பட அதிகார அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி. கடைசியாக இவர் கடந்த 2018 ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ என்ற படத்தை இயக்கினார்.

இந்நிலையில், தனது 3-வது படம் குறித்து அதிகாரபூர்வமாக கிருத்திகா வெளியிட்டுள்ளார். இப்படத்தில், காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்கள். ஈஸ்ட் ரைஸ் கிரியேஷன் தயாரிக்கிறது.