சுற்றுச்சூழல் தினம் - மரக்கன்று நட்ட அல்லு அர்ஜூன்!

cinema
By Nandhini Jun 05, 2021 10:22 AM GMT
Report

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மரக்கன்று ஒன்றை நட்டு இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, தெலுங்கு பட முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன், மனக்கன்று நட்டு, அதற்கு தண்ணீர் ஊற்றும் படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்க நாம் அதிக மரக்கன்றுகளை நட உறுதியேற்க வேண்டும். இயற்கையுடன் இணைந்த வாழ்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயற்கை நமக்குத் தருவதைப் போற்ற வேண்டும். எதிர்கால சந்ததிக்காக நமது புமியை பசுமையான இடமாக மாற்றுவோம். இந்த செயல் எனது மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. நாம் அனைவரும் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த பூமியை பாதுகாக்க நாம் ஒன்றிணந்து செயல்படுவோம்’ என்று தனது இஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் பதிவிட்டுள்ளார்.   

சுற்றுச்சூழல் தினம் - மரக்கன்று நட்ட அல்லு அர்ஜூன்! | Cinema