தனுஷ் நடிப்பில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் அனைத்து பாடல்கள் நாளை வெளியீடு!
‘ஜகமே தந்திரம்’ படத்தின் முழு ஆடியோ நாளை வெளியாகிறது. இந்த தகவலை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. மலையாள நடிகை ‘ஐஸ்வர்யா லக்ஷ்மி’ இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் ஜூன் 18-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், படத்தின் முழு பாடல்களும் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நான்காவது பாடல் ‘ஆளா ஓலா’ என்ற பாடலும், ஐந்தாவது பாடல் ‘தீங்கு தாக்க’ என்ற பாடலும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திலிருந்து இதற்கு முன்னர் வெளியாகிய ‘ரகிட ரகிட’ மற்றும் ‘புச்சி’ பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.