இளையராஜா 78-வது பிறந்தநாள் - வாழ்த்து தெரிவித்த உயிர்த்தோழன் பாரதிராஜா
இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 78-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு ரசிகர்களும், திரைப் பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே இளையராஜாவும், பாரதிராஜாவும் நெருங்கிய நண்பர்கள்.
பாரதிராஜா இயக்கிய முதல் படமான 16 வயதினிலே தொடங்கி, கிழக்கே போகும் ரயில், நிழல்கள், சிகப்பு ரோஜாக்கள், காதல் ஓவியம், உள்ளிட்ட பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இன்று இளையராஜா தனது 78வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இது குறித்து இயக்குநர் பாரதிராஜா டுவிட்டரில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
வாழ்த்துக்கள்டா... உயிர்த் தோழன்
பாரதிராஜா உனக்கும்,
உன் இசைக்கும்,
நம் உறவுக்கும்,
என்றும் வயதில்லை
வாழ்த்துக்கள்டா. உயிர்த் தோழன் பாரதிராஜா.
என்று வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.
