பத்திரிகையாளர்களுக்கு உதவி செய்த நடிகர் விஜய் சேதுபதி!
நடிகர் விஜய் சேதுபதி சினிமா பத்திரிகையாளர்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் பண உதவி அளித்து உதவி செய்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பிடியில் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள் என சிக்கித் தவித்து வருகிறார்கள்.
சினிமா தொழிலாளர்களைப் போல சினிமா பத்திரிகையாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சினிமா பத்திரிகையாளர்கள் 190 பேருக்கு தலா 1000 ரூபாய் அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
தற்போது விஜய் சேதுபதி பத்திரிகையாளர்களுக்கு பண உதவி அளித்துள்ளார். அதை பணம் பெற்றுக் கொண்ட ஒரு பத்திரிகையாளர் தெரிவித்ததால் மற்றவர்களுக்கு தெரியவந்துள்ளது. விஜய் சேதுபதியின் இச்செயலை சமூவலைத்தளங்களில் பலர் பாராட்டி வருகிறார்கள்.