பிரபல நடிகை தீபா வெங்கட் இறந்துவிட்டாரா? பதிலடி கொடுத்த தாய்!
நடிகை தீபா வெங்கட் தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலும், பெரியத் திரையிலும் குணச்சித்ர நடிகையாக வலம் வந்தவர்.
நடிகை மட்டும் அல்லாமல் இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும் ஆவார். முன்னணி நடிகைகளான சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
இதனிடையே, தீபா வெங்கட் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வந்தது.
இது குறித்து தீபா வெங்கட் தாய் கூறுகையில், “என் மகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இப்போ அவருக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. வீட்டில் அவர் நலமுடன் உள்ளார். யார் என் மகள் குறித்து இந்தச் செய்தியை பரப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை. தயவு செய்து யாரும் இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்பாதீங்க என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
