போலி அடையாள அட்டையை காட்டி தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபல நடிகை?

cinema
By Nandhini Jun 01, 2021 07:42 AM GMT
Report

தன்னை முன்களப் பணியாளர்கள் என்று போலியான அடையாள அட்டையை காண்பித்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக நடிகை மீரா சோப்ரா மீது புகார் எழுந்துள்ளது.

பாஜக கட்சியின் தானே பிரிவுத் தலைவர் நிரஞ்சன் தாவ்கரே, நடிகை மீரா சோப்ரா தன்னை முன்களப் பணியாளர் என்று தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டி, அடையாள அட்டையை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு நடிகை மீரா சோப்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகை மீரா சோப்ரா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புகிறோம். மேலும் நாம் அனைவரும் தடுப்பூசி கிடைக்க முயற்சிக்கிறோம்.

இதேபோல் எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் உதவி கேட்டு முயற்சித்தேன். 1 மாத முயற்சிக்குப் பிறகு ஒரு மையத்தில் பதிவு செய்ய முடிந்தது. எனது ஆதார் அட்டையை அனுப்பும்படி கேட்டனர். சோஷியல் மீடியாவில் பரவி வரும் அடையாள அட்டை என்னுடையது அல்ல.

பதிவு செய்வதற்காக எனது ஆதார் அட்டை என்னிடம் கேட்கப்பட்டது. நான் ஆதார் மட்டும் தான் கொடுத்தேன். உங்கள் கையொப்பம் இல்லாத எந்த அடையாளமும் செல்லுபடியாகாது. எனது அடையாள அட்டை என்ற பெயரில் போலியாக முதல் முறையாக ட்விட்டரில் வந்ததை நானே பார்த்தேன்.

இதுபோன்ற நடைமுறைகளை நான் முற்றிலுமாக கண்டிக்கிறேன். இதுபோன்ற ஏதேனும் அடையாள அட்டை செய்யப்பட்டிருந்தால் எப்படி, ஏன் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.