தொடர்ந்து அஜீத் வீட்டை குறி வைக்கும் விஷமிக்கிருமிகள் - ரசிகர்கள் ஆவேசம்!
நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில், அது புரளி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீப காலமாக நடிகர்கள் அஜீத், விஜய், தனுஷ், சரத்குமார், விஜயகாந்த், ரஜினிகாந்த் என பல பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்மநபர் ஒருவர், அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டார். இதனையடுத்து, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் விரைந்து சென்று மோப்ப நாய் உதவியுடன் ஒரு மணி நேரம் சோதனை செய்தனர்.
சோதனையில் எதுவும் சிக்காததால் அது புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டும் இதேபோல் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர், அது வதந்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அஜீத் ரசிகர்கள் உச்சகட்ட கடுப்பில் இருக்கிறார்கள். இதுபோன்ற விஷமிகளை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
