கொரானாவால் உயிருக்கு போராடும் தன் நண்பருக்காக உதவி கேட்ட நடிகை சுனைனா!

cinema
By Nandhini May 31, 2021 10:49 AM GMT
Report

கொரானாவால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பருக்கு சமூகவலைத்தளம் மூலம் உதவி செய்யும்படி நடிகை சுனைனா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை சுனைனா. இவர், மாசிலாமணி, தெறி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்ட தனது நண்பருக்காக டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அதில், ஒரு அவசர தேவைக்காக இந்த வீடியோ வெளியிடுகிறேன். எனது நண்பர் அபினேஷ் என்பவர் ஒரு மாதத்திற்கு மேலாக கொரானாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லை. அவருக்கு நுரையீரலில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தற்போதைய மருத்துவமனையில் சிகிச்சை பெற இயலாது.

அதனால் வேறு மருத்துவமனையில் மாற்றப்பட்டு உடனடியாக சிகிச்சை பெறவேண்டும். அவரிடன் போதிய பண வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறார். நான் சமீபத்தில் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால் அந்த வலி என்ன என்பது எனக்கு தெரியும். அதனால் உங்களால் முடிந்த சிறியளவு உதவியாக இருந்தாலும் தயவு செய்து செய்யுங்கள். அதோடு உங்களுக்கு ஒரு லிங்கை அனுப்புகிறேன். அதை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவி செய்ய சொல்லுங்கள். இது மிகமிக அவசரம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.