பிரபல நடிகர் விமான விபத்தில் உயிரிழந்தார்!
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோ லாரா விமான விபத்தில் மரணம் அடைந்துள்ள சம்பவம் அவரது ரசிகர்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாராவும் உயிரிழந்துள்ளார்.
1989ம் ஆண்டு ‘டார்சான் இன் மன்ஹாட்டன்’ என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் லாரா நடித்தார். இந்த தொடர் புகழ்பெற்றதால் நடிகர் லாரா பிரபலமடைந்தார்.
அதனையடுத்து, 1996ம் ஆண்டு முதல் 1997 வரையில் ‘டார்சன் – தி எபிக் அட்வெஞ்சர்ஸ்’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் மிகவும் புகழ்பெற்றார்.
இவர், டார்ஸான், அமெரிக்கன் சைபாக்-ஸ்டீல் வாரியர், ஸ்டீல் ஃ ப்ரண்டியர், ஹாலோக்ராம் மேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு லாரா, க்வென் ஷாம்ப்ளின் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், டென்னெஸ்ஸே என்ற சிறிய ரக விமானத்தில் லாரா தனது மனைவியுடன் ப்ளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி ஏரிக்குள் விழுந்தது. இதில் பயணித்த 7 பேரும் இறந்திருக்க கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ரூத்தர்ஃபோர் மீட்புக்குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோ லாரா விமான விபத்து அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
