ஊரடங்கில் ஏழை, எளியவர்களுக்கு உணவு அளித்து வரும் நடிகை ஷகிலாவின் மனிதநேயம் - குவியும் பாராட்டு

cinema
By Nandhini May 31, 2021 10:22 AM GMT
Report

ஒரு காலத்தில் இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ஷாகிலா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தன் வாழ்க்கை பற்றி எழுதிய, ஷகிலா சுயசரிதை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் அடிப்படையில் இந்த சுயசரிதை திரைப்படமாகவும் வெளியானது. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரது பாராட்டுக்களை பெற்று தனக்கு முன்னர் இமேஜ்-ஐ உடைத்து வருகிறார்.

கொரோனா பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார் நடிகை ஷகிலா.

இது குறித்து நடிகை ஷகிலா கூறுகையில், உங்களிடம் இருக்கின்ற இரண்டு கைகளில் ஒன்றை உங்களுக்காகவும், மற்றொன்றை பிறருக்காகவும் உதவி செய்யுங்கள். முடிந்த அளவுக்கு ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து வாருங்கள் என்றார்.

நடிகை ஷகிலாவின் இந்த மனிதநேயத்தை  சமூகவலைத்தளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர். 

ஊரடங்கில் ஏழை, எளியவர்களுக்கு உணவு அளித்து வரும் நடிகை ஷகிலாவின் மனிதநேயம் - குவியும் பாராட்டு | Cinema