பிரபல நடிகை ப்ரனிதாவுக்கு திடீர் திருமணம்!

cinema
By Nandhini May 31, 2021 10:08 AM GMT
Report

தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘உதயன்’ படத்தின் மூலமாகத் தமிழில் அறிமுகமானவர்தான் நடிகை ப்ரனிதா.

இவர் சகுனி மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ப்ரனிதா சுபாஷுக்கு பெங்களூரைச் சேர்ந்த நிதின் ராஜு என்பவருடன் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் திருமணப் புகைப்படங்களை பதிவிட்டார்.

இதன் பிறகுதான் நடிகை ப்ரனிதாவுக்கு திருமணம் முடிந்துள்ளது தெரியவந்தது. இத்திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். லாக்டவுன் என்பதால் எளிமையாக திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.    

பிரபல நடிகை ப்ரனிதாவுக்கு திடீர் திருமணம்! | Cinema

பிரபல நடிகை ப்ரனிதாவுக்கு திடீர் திருமணம்! | Cinema