லாக்டவுனில் அம்மாவுக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக மாறிய பிரபல நடிகர்!

cinema
By Nandhini May 31, 2021 09:58 AM GMT
Report

நடிகர் கிருஷ்ணா தனது அம்மாவுக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக மாறிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரரான கிருஷ்ணா அஞ்சலி, இருவர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் அலிபாபா, கற்றது களவு, கழுகு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கழுகு படம் தான் திருப்புமுனையாக அமைந்தது.

நடிகர் கிருஷ்ணா, தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்கள் அம்மா ஒரு ஹேர் கட் செய்ய விரும்பும் போது, உங்களால் வேறு ஏற்பாடு செய்ய முடியாத போது நீங்கள் தான் பொறுப்பை எடுத்தாக வேண்டும். தற்போது உங்கள் அம்மாவுக்காக நீங்கள் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆகவேண்டும் என்றால் மாறத் தான் வேண்டும். நான் ஒரு ஸ்டைலிஸ்ட் என்று சொல்லிக் கொள்வது மிகையானாலும் அம்மாவுக்கு ஹேர்கட் பிடித்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.