நடிகர் குட்டி ரமேஷ் உயிரிழந்தார்!

cinema
By Nandhini May 14, 2021 09:19 AM GMT
Report

நடிகர் குட்டி ரமேஷ் உடல் நலக்குறைவினால் இன்று உயிரிழந்தார். இவரது இறப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி’ சீரியலில் நடிகை ஜாக்லினுக்கு அப்பாவாக நடித்து வந்தவர் குட்டி ரமேஷ். இந்த தொலைக்காட்சி தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

பல சீரியல்களிலும், சினிமாவிலும் குட்டி ரமேஷ் நடித்திருக்கிறார். சிறிது நாட்களாக உடல் நலக்குறைவானால் அவதிப்பட்டு வந்த குட்டி ரமேஷ் இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு  சீரியர் மற்றும் சினிமாத்துறை நடிகர், நடிகைகள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் குட்டி ரமேஷ் உயிரிழந்தார்! | Cinema